Sunday, July 11, 2010

காக்னிசன்ட் முகாம்

காக்னிசன்ட் மென்பொருள் நிறுவனம் சார்பில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு, விஐடி பல்கலைக் கழகத்தில் ஜூலை 15-ம் தேதி நடைபெறவுள்ளது.2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் பிஎஸ்ஸி (கணினி அறிவியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ், இணடஸ்டிரியல் எலக்ட்ரானிக்ஸ்) பிசிஏ ஆகிய பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.
10-ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பில் 60 சதவீதத்திற்கு மேல்  மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தொலைதூர கல்வி, பகுதி நேர படிப்பு மூலம் பட்டம் பெற்றவர்கள் பங்கு கொள்ள இயலாது.ஷிப்ட் முறையில் பணியாற்றவும், இந்தியாவில் எந்த இடத்திலும் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும்.  இந்த நேர்முகத் தேர்வு விஐடியில் உள்ள அண்ணா அரங்கத்தில் வியாழக்கிழமை (ஜூலை 15) காலை 8 மணிக்கு நடைபெறும். 
பங்கேற்க விரும்புவோர் பயோடேட்டா, மார்பளவு புகைப்படங்கள் 2, சான்றிதழ்கள் ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும். பதிவு கட்டணம் இல்லை. வேலூர் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியான நபர்கள் இந்த  வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என பல்கலைக் கழக வேந்தரி ஜி. விஸ்வநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP