தொடங்கியது திட்டம்
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப் படும் என்று கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருந்தார். அந்த வகையில் தமிழிலேயே படித்து வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்திருந்த பேதுரு என்பவருக்கு ஜெராக்ஸ் ஆபரேட் டர் பணிக்கான நியமன உத்தரவை கருணாநிதி வழங்கி முன்னுரிமை திட்டத்தை தொடங்கி வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் ஜெராக்ஸ் ஆபரேட்டராக பேதுரு பணிபுரிவார்.