ஆண்டுக்கு 500 பேர்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட 20 சமுதாயக் கல்லூரிகளில் தலா 25 பேருக்கு என ஆண்டுக்கு 500 பேருக்கு இலவசமாக தொழில் திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக துணைவேந்தர் சபாபதி மோகன் தெரிவித்துள்ளார். உடனடி வேலை வாய்ப்புகேற்ற வகையில் அமையும் இந்த ஓராண்டு கால பயிற்சியானது நடப்பு கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.