விரைவில் வி.ஏ.ஓ, குரூப்- 2
தமிழ்நாடு முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ. காலியிடங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிரப்பப்பட்டன. அதற்கான தேர்வினை லட்சக்கணக்கானோர் எழுதினர். 10-ம் வகுப்பு மட்டுமே கல்வித்தகுதி என்பதால் வி.ஏ.ஓ தேர்வுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சுமார் 1,500 கிராம நிர்வாக அலுவலர்களைத் (வி.ஏ.ஓ.) தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு ஜூலை 21-ல் வெளியிடப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரியில் எழுத்துத் தேர்வு நடைபெறலாம்.
அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட குரூப் 2 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு நவம்பரில் வெளியாகும் எனத் தெரிகிறது.