Tuesday, July 20, 2010

வங்கி கடைநிலை ஊழியர்

ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா வங்கியின் சென்னை கிளைகளில் கடைநிலை பணியாளராக நிரந்தரமாக பணியாற்ற தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி (12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கக் கூடாது)
வயது (30-06-2010 அன்று) 
பொதுப்பிரிவினர்: 18- 26
பிற்படுததப்பட்டோர்: 18- 29
ஆதி திராவிடர்/ பழங்குடியினர்: 18- 31
விண்ணப்பதாரர்களுக்கு கண்டிப்பாக வட்டார மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர், வகுப்பு/ பிரிவு, தொடர்பு முகவரி, கல்வித் தகுதி, முன் அனுபவம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் அதன் விவரம் உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய விண்ணப்பத்தை (ஆங்கிலம், இந்தி அல்லது தமிழில் எழுதி) கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
முகவரி:
ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா,
3வது மாடி,
30, ஒயிட்ஸ் ரோடு,
ராயப்பேட்டை, சென்னை- 600 014
தொலைபேசி: 044- 64617201, 28582634
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 16-08-2010க்கு முன்னதாக.
மேல் விவரங்கள் மற்றும் விதிமுறைகளை வங்கியின் அறிவிப்புப் பலகையை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP