Sunday, June 27, 2010

சவூதியில் நர்ஸ் வேலை

சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் குழந்தை மற்றும் முதியோருக்கான தீவிர கண்காணிப்பு பிரிவில் பணி யாற்ற பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். 
  2 ஆண்டு பணி அனுபவத்துடன் 40 வயதுக்குட்பட்ட பி.எஸ்சி. செவிலியர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்.

 இந்த பணிக்கான நேர்முகத் தேர்வு சவூதி அமைச்சக தேர்வுக் குழுவினரால் ஜூலை 3-வது வாரத்தில் புதுதில்லி, கொச்சியில் நடைபெறவுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு தகுதிக்கேற்றவாறு ஊதியம் மற்றும் இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.
 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்கள், வெள்ளைப் பின்னணியில் எடுக்கப்பட்ட 10 புகைப்படங்களுடன் எண்: 48, டாக்டர் முத்துலெட்சுமி சாலை, அடையாறு, சென்னை என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அலுவலக பணி நாள்களில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்கள் அறிய 044- 24464268, 24467562 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். கொள்ளலாம்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP