தமிழுக்கு முன்னுரிமை
கோவையில் 5 நாட்களாக நடைபெற்று வந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவுக்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார். மாநாட்டு சிறப்பு தபால் தலையை மத்திய தகவல தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராசா வெளியிட தமிழக முதலமைச்சர் கருணாநிதி பெற்றுக்கொண்டார்.
பின்னர் கருணாநிதி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்பதும் ஒன்று. தமிழில் படிப்பவர்களுக்கு செம்மொழி மாநாட்டில் கிடைத்த இனிக்கும் செய்தி.