வீடியோவில் விண்ணப்பம்
வேலைதேடுவோர் வீடியோவில் விண்ணப்பம் அனுப்பும் புதிய முறையை சென்னையில் உள்ள C2C மானேஜ்மென்ட் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வேலைதேடுவோர் தங்களைப் பற்றியும், தங்களது படிப்பு, அனுபவம், சிறப்புத் தகுதிகள், எதிர்பார்க்கும் வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வீடியோவில் பேசி பதிவு செய்து அனுப்பலாம். இந்த புதிய முறையை இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளதாக பெருமையுடன் குறிப்பிடுகிறது C2C நிறுவனம். முழு விவரங்களை http://c2cvideoresume.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.