கனரா வங்கி அதிகாரி பணி
கனரா வங்கி இன்வெஸ்ட்மென்ட் ஆபீஸர் (முதலீட்டு அதிகாரி) பணிக்கு தகுதியானவர்களை தேர்நதெடுக்க உள்ளது. இது ஒப்பந்த அடிப்படையிலானது. இந்தியா முழுவதும் மாநில வாரியாக மொத்த காலியிடங்கள் 700. (தமிழ்நாடு- 110, கேரளா- 54, கர்நாடகா- 140).
பணியின் பெயர்: இன்வெஸ்ட்மென்ட் ஆபீஸர்
வயது: 21- 30
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. எம்.பி.ஏ படித்திருந்தால் முன்னுரிமை. இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட வங்கியின் பிற புராடக்ட்டுகளை விற்பனை செய்வதில் ஆர்வம். பணி செய்ய விருப்பப்படும் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் வட்டார மொழியை நன்கு பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருத்தல்.
சம்பளம்: ரூ.15,000
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-07-2010
மேல் விவரங்களுக்கு:
http://www.canarabank.com/English/Scripts/RecruitmentProjecta.aspx