வேலைவாய்ப்பு பயிற்சிகள்
கன்னியாகுமரி மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் 2010-11 ஆம் ஆண்டுக்கு 18 முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 200 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது.
ஜேசிபி இயக்குதல் மற்றும் பராமரித்தல், பொக்லைன் இயக்குதல் மற்றும் பராமரித்தல்,எலக்ட்ரீசியன், ஆட்டோ மொபைல் டெக்னாலஜி, கணினி, சிஎன்சி, ஓட்டுநர் பயிற்சியுடன் 4 சக்கர வாகனம் பழுது பார்க்கும் பயிற்சிகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இந்த பயிற்சியை மகளிர் நல மேம்பாட்டுக் கழகத்தின் நிபந்தனைக்கு உள்பட்டு, பயிற்சியின் முடிவில் 90 சதவிகிதம் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய நிறுவனங்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் படிப்பு மற்றும் முழு விவரத்துடன் ‘திட்ட அலுவலர், மகளிர் திட்டம், 50, 6-8 சற்குணவீதி, ராமவர்மபுரம்’ என்ற முகவரிக்கு வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கேட்டுக்கொண்டுள்ளார்.