அப்போலோ டயர்ஸ் வேலை
அப்போலோ டயர்ஸ் தனது நிறுவனத்தில் பணியமர்த்துவதற்காக தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளது. அதற்கான நேர்முகத் தேர்வு வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. டிப்ளமோ இன் மெக்கானிக்கல் என்ஜினீயரிங், ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் பிரிவில் தேர்ச்சி பெற்ற அனைத்து கல்லூரி மாணவர்களும் ப்ங்கேற்கலாம். வயது 18- 21க்குள் இருத்தல் அவசியம். 5.6 அடி உயரம், 53 கிலோ எடை உள்ளவர்களாக இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வினை முன்னிட்டு வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரி வரை சென்று வர இலவசமாக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.