பொது அறிவு குறிப்புகள்
ஜூன் 1
* தேசிய ஆலோசனைக்குழு {National Advisory Council (NAC)} செயலாளராக ரீட்டா சர்மா ஐ.ஏ.எஸ் நியமனம். சோனியா காந்தியை தலைவராகக் கொண்ட தேசிய ஆலோசனைக்குழுவுக்கு 14பேரை உறுப்பினர்களாக பிரதமர் மன்மோகன் சிங் நியமித்தார். அவர்களது பெயர் விவரம்:
1.அருணா ராய்
2. ஜியான் டிரேஸ்
3. என்.சி. சக்ஸேனா
4. ஏ.கே. சிவக்குமார்
5. எம்.எஸ்.சாமிநாதன்
6. வி. கிருஷ்ணமூர்த்தி
7. நரேந்திரா ஜாதவ்
8. மிராய் சட்டர்ஜி
9. ஃபரா நக்வி
10. பிரமோட் டாண்டன்
11. ஹர்ஷ் மந்தர்
12. ராம் தயாள் முண்டா
13. அனு அகா
14. மாதவ் காட்கில்
* ரயில்வே போர்டு தலைவராக விவேக் சஹாய் நியமிக்கப்பட்டார்.
* இந்தியாவின் முதல் புகையில்லா மாநிலமாக சிக்கிம் அறிவிப்பு. உலக புகையிலை ஒழிப்பு தினமான மே 31 (2010) அன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
* மராட்டிய மாநில போலீஸ் டி.ஜி.பி ஆக சிவானந்தன் நியமனம்
* இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்ஸராக சஹாரா நிறுவனம் மீண்டும் தேர்வு. 2013 வரை மூன்றாண்டுகள் ஸ்பான்ஸர்ஷிப் நீடிக்கும்.
* ஜிங் யுன் (Xingyun) என்ற பெயரில் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியது சீனா. இது விநாடிக்கு ஒரு குவாட்ரில்லியன் கால்குலேஷன்களுக்கு மேல் ரன் செய்யக்கூடியது. இதற்கு முன் சீனா உருவாக்கிய டியானே- 1(Tianhe-1) என்ற சூப்பர் கம்ப்யூட்டரை விட இருமடங்கு வேகம் கொண்டது.