ஐ.சி.ஐ.சி.ஐ.யில் 7ஆயிரம் வாய்ப்பு
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இந்த நிதியாண்டில் 5,000- 7,000 புதிய ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளது. இந்த தகவலை வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சார் மும்பையில் நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தா கோச்சார் குறிப்பிட்டார். கூடுதல் கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.களை திறக்க வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.