Friday, May 21, 2010

திருநெல்வேலியில் கனிமொழி நடத்தும் முகாம்

தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் கனிமொழி எம்.பி. வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறார்.


திருநெல்வேலி மாவட்டத்திற்கான முகாம் திருநெல்வேலியில் ஜூலை 2-வது வாரம் நடக்க உள்ளது. 45-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்ந்தெடுக்கின்றன.
 முன்னதாக ஜூன் 2-வது வாரத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக சிறப்புக் குழுவினர் செல்கிறார்கள். வேலை தேடும் இளைஞர்களுக்கு டோக்கன் வழங்குகிறார்கள். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள முடியும். முகாமில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை திருநெல்வேலி மாவட்ட தி.மு.க செயலாளர் கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ளார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP