பிளஸ்2 பதிய சிறப்பு ஏற்பாடு
கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு வசதியாக நான்கு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
சூலூர் ஆர்.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி என்.ஜி.எம். கலை அறிவியல் கல்லூரி, கோவை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவுக்கு செல்பவர்கள் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி பதிவு செய்திருந்தால் அந்த அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை கொண்டு செல்ல வேண்டும். இம்மாதம் (மே) 26, 27 மற்றும் 28ம் தேதிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாகவும் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள முகாமினை பயன்படுத்திக்கொள்ளுமாறும் கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.