வருமான வரித்துறை- 30,000 பேர் தேவை
இந்திய அரசின் வருமான வரித்துறைக்கு அவசரமாக 30ஆயிரம் ஊழியர்கள் தேவைப்படுவதாக நிதித்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 4ஆயிரம் அதிகாரிகள், 4ஆயிரம் ஆய்வாளர்கள், 12ஆயிரம் வரி உதவியாளர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மற்றும் பிற உதவியாளர்கள் என தேவைப்பட்டியல் நீளுகிறது.
வரி வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகவே இந்த அவசர தேவை. புதுடெல்லியில் ஜூன் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ள வருமான வரித்துறை தலைமை ஆணையர்கள் மாநாட்டில் இது பற்றி பேசப்பட்டு அரசின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்படும் என தெரிகிறது.