பெப்சியில் வாய்ப்புகள்
பெப்சிகோ இந்தியா, நடப்பு 2010 உடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நல்ல வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது. பெப்சியில் இந்தியர்களுக்கு தனி மரியாதை உண்டு. பெப்சிகோவின் உலகத் தலைவர் இந்திரா நூயி தவிர மேலும் 75 இந்தியர்கள் உலக அளவில் முக்கியப்பதவிகளில் கோலோச்சிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பெப்சிகோ இந்தியா 5,500 பேரை நேரடி ஊழியர்களாக பணியில் சேர்க்க உள்ளது. திறமையும், தன்னம்பிக்கையும் கொண்டவர்கள் தயாராகலாம்.