Saturday, May 15, 2010

3லட்சம் பேருக்கு வாய்ப்பு

தமிழக அரசின் எல்காட் நிறுவனம் சென்னை சோழிங்கநல்லூரில் 377 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைத்துள்ளது. இதனை தமிழக துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவில் விப்ரோ, எச்.சி.எல்., மஹிந்திரா சத்யம் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களைத் திறக்க முன்வந்துள்ளதாகவும், இதன் மூலம் நேரடியாக ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் மறைமுகமாக 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். 
இதே போல் கோவை, திருச்சி, சேலம்,  மதுரை, ஓசூர் போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் இதுபோன்ற தகவல் தொழில்நுட்ப பூங்கா - சிறப்பு பொருளாதார மண்டலங்களை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய ஸ்டாலின், இதனால் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வேலைவாய்ப்பு அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் தேசிய அளவில் தகவல் தொழில்நுட்பத் துறை 12 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், அதுவே தமிழ்நாட்டில் 29 சதவீத என்றும் குறிப்பிட்டார் ஸ்டாலின்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP