Wednesday, May 5, 2010

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்-10,117வாய்ப்புகள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 2010 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை (ஆண் / பெண்) காவலர்கள், இரண்டாம் நிலை (ஆண் / பெண்) சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் (ஆண்கள்) பதவிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பதவியின் பெயர், காலியிட எண்ணிக்கை மற்றும் பிற விவரங்கள்.
இரண்டாம் நிலைக் காவலர்கள்:
மாவட்ட / மாநகர சேமப்படை- 2500 பணியிடங்கள்
சம்பளம்: ரூ. 5200- 20200+ தர ஊதியம் ரூ.1900
தமிழ்நாடு சிறப்புக் காவல் படை- 6500 பணியிடங்கள்
சம்பளம்: ரூ. 5200- 20200+ தர ஊதியம் ரூ.1900
இரண்டாம் நிலைச் சிறைக்காவலர்கள்- 487 பணியிடங்கள்
சம்பளம்: ரூ. 5200- 20200+ தர ஊதியம் ரூ.1800
தீயணைப்பாளர்கள்- காலியிடங்கள் 625+ 5 ST Backlog
சம்பளம்: ரூ. 5200- 20200+ தர ஊதியம் ரூ.1800
மொத்தக் காலியிடங்கள்- 10112+ 5 ST Backlog

தெரிவு செய்யப்பட்ட தபால் அலுவலகங்களில் விண்ணப்பம் கிடைக்கும் நாள்: 10/05/2010
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சேர கடைசி நாள்: 15/06/2010
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 8/08/2010
மேல் விவரங்களுக்கு:
www.tn.gov.in/tnusrb

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP