தமிழக காவல்துறையில் 9ஆயிரம் வாய்ப்புகள்
தமிழக காவல் துறைக்கு 2011-ம் ஆண்டில் 9000 பேர் தேர்வு செய்யப்பட இருப்பதாக தமிழக காவல் துறை இயக்குநர் லத்திகா சரண் கூறியுள்ளார். சிவகாசியில் நிருபர்களிடம் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
காவலர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனவும், தற்போது காவல் துறைக்கு 4,000 பேர் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி பெற்று வருவதாகவும், வரும் (2011) ஆண்டில் 9,000 பேர் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் கூறியிருக்கிறார் லத்திகா சரண்.