Monday, April 5, 2010

Current Affairs

நடப்பு முக்கிய நிகழ்வுகள்
(கடந்த வாரம்: மார்ச் 27- ஏப்ரல் 2)

உலகம்
மார்ச் 30: ஆதரவுக்குரல்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவியை அளிக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வலியுறுத்தினார்.

இந்தியா
மார்ச் 28: அக்னி சோதனை
அணு ஆயுதங்களை தாங்கி 700 கி.மீ தொலைவு வரை சென்று இலக்கைத் தாக்கும் அக்னி 1 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒரிசா கடலோரப்பகுதியில் உள்ள வீலர் தீவில் இந்தப் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மார்ச் 31: பத்ம விருதுகள்
நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர்  மாளிகையில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்கினார். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், கர்நாடக இசைக்கலைஞர் உமையாள்புரம் சிவராமன், நாடகத்துறையை சேர்ந்த இப்ராகிம் அல்காஜி, அப்போலோ மருத்துமனை தலைவர் பிரதாப் சந்திர ரெட்டி ஆகியோர் பத்மவிபூஷண் விருதுகளையும், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இந்தி நடிகர் ஆமிர்கான் உள்ளிட்டோர் பத்மபூஷண் விருதுகளையும் பெற்றனர்.
ஏப்ரல் 1: தினமும் வட்டி
வங்கிகளில் சேமிப்புக்கணக்கில் உள்ள பணத்துக்கு தினமும் வட்டி கணக்கிட்டு வழங்கும் முறை ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
ஏப்ரல் 1: மக்கள் தொகை கணக்கெடுப்பு
15-வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தொடங்கி வைத்தார். தேசிய மக்கள் தொகை பதிவேட்டுப் பணியும் முதல் முறையாக தொடங்கியது.
ஏப்ரல் 1: கல்வி உரிமைச் சட்டம்
6- 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி அளிக்கும் கல்வி உரிமைச் சட்டம் மத்திய அரசால் நாடு முழுவதும் அமல் படுத்தப்பட்டது

தமிழகம்
மார்ச் 27: இடைத்தேர்தல்
பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் நடந்தது
மார்ச் 27: மாறியது ஊனம்
தமிழ்நாடு அரசின் அலுவலகங்களில் உள்ள "ஊனமுற்றோர்" என்ற சொல் "மாற்றுத் திறனாளிகள்" என மாற்றப்படும் என முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.
மார்ச் 31: புத்தகங்கள் நாட்டுடைமை
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபாவின் புத்தகங்களை நாட்டுடைமை ஆக்கி அவருக்கு ரூ.10 லட்சம் பரிவுத்தொகை வழங்க முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டார்.
மார்ச் 31: புதிய எம்.எல்.ஏ
பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் இன்பசேகரன், சட்டமன்ற மன்ற சபாநாயகர் அறையில் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


நியமனங்கள்:
மார்ச் 29: மீண்டும் சோனியா 
தேசிய ஆலோசனைக்குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் நியமிக்கப்பட்டார். இது மத்திய கேபினட் அமைச்சருக்கு இணையான பதவி. மத்திய அரசின் குறைந்த பட்ச செயல்திட்டத்தை செயல்படுத்துவதே ஆலோசனைக் குழுவின் முக்கியப் பணி.
ஏப்ரல் 1: புதிய தலைவர்

இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக டி.எம்.பாசின் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP