Thursday, April 22, 2010

சுயதொழில் தொடங்க மானியத்துடன் ரூ.5 லட்சம் கடனுதவி

 தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க 15 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, சட்டமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உற்பத்தி அல்லது சேவை, வணிகம் சார்ந்த தொழில்களைத் தொடங்க விரும்பினால், அவர்களுக்கு 15 சதவீத மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வங்கிகள் மூலமாக கடன் உதவி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.100 கோடியில் 10 ஆயிரம் பேருக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் திறன் படைத்தோர் ஆகியோரை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தொழில் மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP