Current Affairs
நடப்பு முக்கிய நிகழ்வுகள்
(கடந்த வாரம்: மார்ச் 13-19)
மார்ச் 13:
உலகின் குள்ளமான மனிதர் என 2008ம் ஆண்டில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டவர் சீனாவை சேர்ந்த பிங்பிங் (வயது 21). இவர் இத்தாலிக்கு டி.வி.நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். 2அடி 5அங்குலமே உயரம் கொண்ட பிங்பிங்கின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவரது மரணம் இரு நாட்களுக்குப் பிறகு மார்ச் 15ம் தேதி வாக்கிலேயே உலகுக்கு தெரிய வந்தது.மார்ச் 14:
சீனாவின் இறையாண்மைக்கும் பிராந்திய உணர்வுக்கும் எதிராக அமெரிக்கா செயல்பட்டு வருவதாக சீன பிரதமர் வென் ஜியாபோ குற்றச்சாட்டினார்.
மார்ச் 16:
பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் ஹிந்து எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கு அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் நிதி உதவி அளிப்பதாக லாகூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்தியா
மார்ச் 19:
முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்,பொருளாதார நிபுணர் பாலச்சந்திர முங்கேகர், கல்வியாளர் ராம் தயாள் முண்டா, நாடகக் கலைஞர் ஜெயஸ்ரீ ஆகிய ஐந்து பேரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமித்து ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உத்தரவு வெளியிட்டார்.
மார்ச் 19:
தமிழகம்
மார்ச் 13:
சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சோனியா காந்தி கலந்து கொண்டார்.
மார்ச் 19:
தமிழக அரசின் 2010-11ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் அன்பழகன் புதிய சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
