CURRENT AFFAIRS
நடப்பு முக்கிய நிகழ்வுகள்
(கடந்த வாரம்: மார்ச் 6- மார்ச் 12)
மார்ச் 6:
கொழும்புவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் நிரூபமா ராவ் சந்தித்தார். இரு நாட்டு ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசிக்கொண்டனர்.
மார்ச் 10:
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் பருவநிலை மாற்றம் தொடர்பாக கடந்தாண்டு நடைபெற்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக இந்தியா, சீனா அறிவித்தன. அதன்படி வளி மண்டலத்தைப் பாதிக்கும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அந்தந்த நாடுகள் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மார்ச் 10:
மியான்மரின் ராணுவ அரசு, அரசியல் கட்சிகள் பதிவு தொடர்பான புதிய சட்டத்தை வெளியிட்டது. அதன்படி சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் அங்கம் வகிக்கவோ தேர்தலில் போட்டியிடவோ முடியாது. 14ஆண்டுகளாக வீட்டுக்காவலில் இருந்து வரும் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூகியை குறிவைத்தே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மார்ச் 10:
இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியுடன் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் சந்திப்பு. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து செயல்படபோவதாக அறிவிப்பு.
மார்ச் 11:
இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சிகாகோவில் கைது செய்யப்பட்ட தஹவூர் ராணாவை அமெரிக்க நீதி மன்றம் ஜாமீனில் விட மறுப்பு. பாகிஸ்தானில் பிறந்த ராணா கனடாவில் குடியுரிமை பெற்று வசிப்பவர்.
இந்தியா
மார்ச் 8:
இந்திய பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா, உலக மகளிர் தினத்தின் 100வது ஆண்டு நாளான இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. சமாஜ்வாதி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழகம்
மார்ச் 7:
* விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் ரூ.100கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
* தமிழ்நாட்டில் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான தனித்துறை இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி விழுப்புரத்தில் அறிவித்தார்.
* சர்வதேச அளவிலான 2010-ஆம் ஆண்டுக்கான ஹில்டன் மனிதநேய விருதுக்கு மதுரை அரவிந்த் கண்காப்பு மையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.