Sunday, March 14, 2010

Malaysian Indian businessmen need One lakh workers

மலேசிய இந்தியர்கள் நடத்தி வரும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்ற ஒரு லட்சம் தொழிலாளர் தேவைப்படுவதாக 'மலேசியன் அசோசியேட்டட் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி' (MAICCI) தலைவர் திரு.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஓட்டல்கள், கட்டுமான நிறுவனங்கள், நகைக்கடைகள், அங்காடிகள், மளிகை கடைகள், லாண்டரிகள், அழகு நிலையங்கள், துணிக்கடைகள், தையல் கடைகள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளன. 'இந்திய ரெஸ்டாரன்டுகளில் பிற நாட்டு சமையல்காரரை வைத்துக்கொள்வது கடினம். எனவே இந்த வாய்ப்புகளுக்கு இந்தியர்களே பொருத்தமானவர்களாக இருப்பார்கள்' என்றும் திரு.ஈஸ்வரன் குறிப்பிட்டிருக்கிறார். மலேசிய இந்தியர்களின் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழிலாளர்களை அசோசியேஷன் மூலமாக எடுத்து நியமித்துக் கொள்ள அனுமதி கேட்டு மலேசிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP