Tuesday, March 9, 2010

ஊனமுற்றோருக்கு அரசு உதவி

வேலை வாய்ப்பற்ற அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் தமிழக அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜீவரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை:
 உடல் உறுப்பு நலம் குன்றியவராகவோ, காது கேளாதவராகவோ அல்லது மனநலம் குன்றியவராகவோ இருந்து தமது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருப்பவராக இருக்க வேண்டும். ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பயனாளிகள் 45வயதை கடக்காதவராகவும், இதர வகை பயனாளிகள் 40வயதை கடந்தவராகவும் இருத்தல் அவசியம்.
 பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். எந்த அரசு நிறுவனத்திலோ, தனியார் நிறுவனத்திலோ பணிபுரிபவராக இருத்தலாகாது. சுயதொழிலிலும் ஈடுபடலாகாது. பள்ளி அல்லது கல்லூரியில பயிலும் முழுநேர மாணவராக இருக்கக்கூடாது. குறைந்த பட்சம் 15ஆண்டுகள் தமிழகத்தில் வசித்தவராக இருக்க வேண்டும்.
 தேர்ந்தெடுக்கப்படும் பயனாளி மேற்கண்டவற்றை உறுதி செய்யும் வகையில் வருவாய்த்துறையிடமிருந்து ஒருங்கிணைந்த சான்றிதழை பெற வேண்டும். பள்ளி இறுதி வரை பயின்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், மேல்நிலை கல்வி பயின்றவர்களுக்கு மாதம் ரூ.375-ம் பட்ட வகுப்பு வரை பயின்றவர்களுக்கு மாதம் ரூ.450-ம் உதவித்தொகையாக 10ஆண்டுகளுக்கு இதர நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கப்படும். பயன்பெற விரும்புவோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP