'நானோ'வில் சாதனை படைத்த நம்மவர்
சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் முடித்து அதே பல்கலைகழகத்தின் 'நானோ டெக்னாலஜி' துறையில் எம்.எஸ் மற்றும் பி.எச்.டி ஆய்வு மேற்கொண்டு வருபவர் ஆர்.சிவராமன் (வயது 24). புதுக்கோட்டையை சேர்ந்தவர். இவருக்கு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள சீகேட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் உதவி விஞ்ஞானியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கான ஆண்டுச்சம்பளம் ரூ.1கோடியே 40 லட்சம். நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக சேமிப்புத் திறன் கொண்ட கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கை கண்டு பிடித்துள்ள சிவராமன், அதற்கு இந்தியா, அமெரிக்காவில் காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார்.