Friday, June 8, 2012

பூபதி-சானியா சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி-சானியா மிர்சா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதிச்சுற்றில் 7-6 (3), 6-3 என்ற நேர் செட்களில் போலந்தின் கிளாடியா-மெக்ஸிகோவின் சான்டியாகோ ஜோடியை வீழ்த்தியது. கிராண்ட் ஸ்லாம் போட்டியில் 2-வது முறையாக பட்டம் வென்றுள்ளது பூபதி-சானியா ஜோடி. இதற்கு முன்னர் 2009-ல் ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றது. சானியாவுக்கு இது 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். பூபதிக்கு இது 12-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். கலப்பு இரட்டையர் பிரிவில் பூபதிக்கு இது 8-வது பட்டம்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP