டி.இ.டி.தேர்வு தள்ளிவைப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டி.இ.டி தேர்வு ஜூலை மாதம் 12-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. டி.இ.டி. தேர்வு ஜூன் 3ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், தேர்வர்களிடம் இருந்து, அரசுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை வந்ததாகவும், தேர்வுக்கு தயாராவதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளது என்றும், டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களே, வேறு பல தேர்வுகளை எழுத இருப்பதாக தெரிவித்து, தேர்வை தள்ளி வைக்க வேண்டுகோள் விடுத்து வந்ததாகவும் இதனை ஏற்று, டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது எனவும், அரசு வேலை நாளில் இந்த தேர்வு நடைபெறுவதால், அதற்கேற்ப உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.