நீதிபதி சம்பத் கமிஷன்
பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சம்பத் தலைமையிலான ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். அது பற்றி நீதிவிசாரணை நடத்த சம்பத் கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் கமிஷன் 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.