ஆ.ராசா கைது
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) இன்று கைது செய்தது. ராசாவுடன் தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, ராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை அளித்திருந்தது.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளால் ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் வகித்து வந்த பதவி கபில் சிபலிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் குறித்து விசாரிக்க நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒருநபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை கபில்சிபலிடம் நேற்று அளித்தது. இந்த நிலையில் ஆ.ராசாவை சி.பி.ஐ இன்று கைது செய்தது.