அமெரிக்கர் கைது
பாகிஸ்தானின் லாகூரில் அமெரிக்க தூதரக அலுவலகத்தில் அதிகாரியாக பணி புரிந்தவர் ரேமண்ட் டேவிஸ். இவர் லாகூரில் 2 பேரை சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பெஷாவரில் மேலும் ஒரு அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். பெஷாவரில் உள்ள போஷ் பல்கலைக்கழக பகுதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ஆரோன் டிகேவன். பாகிஸ்தானில் பயணம் செய்வதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதாலும் அவரிடம் இருந்த அமெரிக்க விசாவின் காலம் கடந்த ஆண்டு அக்டோபருடன் முடிந்து விட்டதாகவும் கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.