Saturday, February 26, 2011

2011-12 ரயில்வே பட்ஜெட்

2011-12-ம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார். இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு மம்தா பானர்ஜி தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும். 56 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக அமைச்சர் அறிவித்தார். பட்ஜெட் வருவாய் ரூ.1,06,239 கோடியாகும்.
முதல் முறையாக ரயில்வே பட்ஜெட் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. செலவு ரூ.73,650 கோடி. தேய்மான நிதியத்துக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* முன்பதிவுக் கட்டணம் 50 சதவீதம் குறைப்பு.
* மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்வு.
* புதிய முயற்சியாக ரயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் வசிக்கும் மக்களுக்காக 10 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். (தமிழகத்தில் திருச்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்).
* ரயில், புறநகர் ரயில், மெட்ரோ ரயில் ஆகிய மூன்றிலும் பயணிக்கும் வகையில் ஒரே பயண அட்டை, சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 
* பெரம்பூரில் இரண்டாவது ரயில் பெட்டி தொழிற்சாலை தொடங்கப்படும் 
* தில்லி-ஜெய்ப்பூர், ஆமதாபாத்-மும்பை மார்க்கத்தில்
ஏ/சி இரண்டு அடுக்கு ரயில் அறிமுகம்.
* புதிய சூப்பர் ஏசி வகுப்பு அறிமுகம்.
* முன்பதிவுக் கட்டணம் முதல் வகுப்புக்கு ரூ.10,
பிற வகுப்புகளுக்கு ரூ.5 ஆகக் குறைப்பு.
* ஜம்மு & காஷ்மீரில் பாலம் கட்டும் ஆலை
அமைக்க முடிவு.
* மணிப்பூரில் டீசல் என்ஜின் தயாரிப்பு ஆலை.
டார்ஜிலிங்கில் சாஃப்ட்வேர் மையம் அமைக்க முடிவு.
* ஜெல்லிங்காம் (மேற்கு வங்கம்),
புதிய பொங்கைகாவோன் (அசாம்), சண்டீகர்,
போபாலில் ரயில் தொழிற் பூங்கா அமைக்க முடிவு.
* 700 மெகாவாட் எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்
மகாராஷ்டிரத்தில் அமைக்க முடிவு
* 1.75 லட்சம் சி, டி பிரிவு, 16 ஆயிரம் முன்னாள்
ராணுவத்தினருக்கான பணியிடங்களை நிரப்ப முடிவு.
* 2011-12-ஐ சூழல் காப்பு ஆண்டாக
கடைப்பிடிக்க முடிவு.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP