Monday, January 31, 2011

கண்காணிப்பு கருவி-எதிர்ப்பு

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள டிரை- வேலி பல்கலைக்கழகத்தில் அமெரிக்க போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள மாணவர்களுக்கு போலி விசா அளிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகம் மூடப்பட்டது. இதனால் அங்கு படித்து வந்த 1,555 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. அவர்களில் 90 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள்.
இதற்கிடையே அங்கு படித்த மாணவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க அவர்களது கணுக்காலில் `ரேடியோ காலர் டேக்' என்ற கண்காணிப்பு கருவியை அமெரிக்க அதிகாரிகள் கட்டாயமாக பொருத்தினர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்திய அரசு சார்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இந்திய மாணவர்கள், கிரிமினல்கள் அல்ல. கண்காணிப்பு கருவியை உடனே அகற்ற வேண்டும்’ என கூறியுள்ளார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP