தகவல்ஆணைய தலைவர்
மத்திய தகவல் ஆணையத்தின் புதிய தலைவராக தகவல் ஆணையர் சத்யானந்த மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்தியப் பிரதேசத்தின் 1973-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். மிஸ்ராவை நியமிக்கும் முடிவு பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் மற்றும் சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய தலைமை தகவல் ஆணையர் ஏ.என்.திவாரியின் பதவிக்காலம் டிசம்பர் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து சத்யானந்த மிஸ்ரா டிசம்பர் 20-ம் தேதி பதவியேற்பார் எனத் தெரிகிறது.