விரைவில் குரூப் 2 அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள சார்நிலை பணிகளை நிரப்புவதற்காக இந்த ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. நகராட்சி ஆணையாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அதிகாரி, துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், நன்னடத்தை அதிகாரி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி தணிக்கை அதிகாரி உள்பட பல்வேறு பதவிகள் குரூப்-2 வில் அடங்கும். பட்டப்படிப்பு படித்தவர்கள் குரூப்-2 எழுதலாம். சுமார் 3ஆயிரம் காலியிடங்களை நிரப்பும் வகையில் தேர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.