Friday, November 26, 2010

பி.என்.ஆர் (PNR) புதிய முறை

ரயில்களில் முன்பதிவு இருக்கை வசதிக்கான பிஎன்ஆர் நிலையை அறிந்து கொள்ளும் வகையில் இந்தியன் ரெயில்வே கூகுளுடன் இணைந்து புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பயணிகள் தங்கள் பிஎன்ஆர் எண்ணைக் குறிப்பிட்டு, 97733 00000 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும்.
பயணம் தொடர்பான அனைத்து தகவல்களும் மொபைல் போனுக்கு வந்து சேரும். 97733 00000 என்ற பத்து இலக்க எண்ணுக்கு மட்டும் அனுப்பினால் போதுமானது. 0 அல்லது +91 என்ற எண்கள் சேர்த்து அனுப்பத் தேவையில்லை என்றும் இந்த சேவைக்கு சிறப்புக் கட்டணம் இல்லை என்றும் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கான சாதாரண கட்டணமே ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(PNR- Passenger Name Record)

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP