Tuesday, October 12, 2010

நெருப்பு வந்தது

பொது அறிவு- வரலாறு
(பழைய கற்கால மக்களின் வாழ்க்கை முறை)
- பழைய கற்கால மக்கள் உணவைத் தேடி அலையும் நாடோடிகளாக இருந்தனர்
- காய்கள், கனிகள், கிழங்குகள், விலங்குகளின் இறைச்சி போன்றவை அவர்களது முக்கிய உணவுப் பொருளாகும்.
- கடும் வெப்பத்தில் இருந்து தப்பவும், விலங்குகளிடம் இருந்து காத்துக் கொள்ளவும் குகைகளில் வசித்தனர்.
- பயிரிடுதல், மண்பாண்டங்கள் செய்தல் இவர்களுக்கு தெரியாது.
- ஆரம்பத்தில் ஆடைகளின்றி அலைந்தனர் பழைய கற்கால மக்கள்
- பின்னர் மரப்பட்டைகள், இலைகள், விலங்குகளின் தோல்கள் ஆடையானது.
நெருப்பின் பயன்
- இரண்டு சிக்கிமுக்கி கற்களை உரசி நெருப்பை உருவாக்கினர்
- நெருப்பைக் காட்டி மிருகங்களை அச்சுறுத்தி விரட்டியடித்தனர்
- தொடர்ந்து, இறைச்சியை வதக்கி உண்ணவும், குளிரில் இருந்து காத்துக் கொள்ளவும் நெருப்பு பயன்பட்டது.
- இறைவன், சமயம் பற்றிய சிந்தனை பழைய கற்கால மனிதர்களுக்கு கிடையாது
- இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை தெரியாது
- இறந்தவர்களின் உடல்கள் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இரையாகின.
- பழைய கற்கால மனிதனின் குகைகளில் அழகிய ஓவியங்கள் காணப்பட்டன. யானை, கரடி, மான் ஆகியவற்றை வேட்டையாடும் ஓவியங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
(தொடரும்)

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP