Saturday, May 29, 2010

விமானப்படை ஆள்சேர்ப்பு

இந்திய விமானப்படைக்கான ஆள்சேர்ப்பு முகாம் சென்னை ஆவடியில் 2010 ஜூலை 24 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குரூப் Y {ஆட்டோ டெக் மற்றும் IAF (P) டிரேட்ஸ் மற்றும் குரூப் X ( டெக்னிக்கல்) டிரேட்ஸ் ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த திருமணம் ஆகாத ஆண் இந்திய குடிமகன்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கல்வித் தகுதி:
குரூப் Y {ஆட்டோ டெக் மற்றும் IAF (P) டிரேட்ஸ் பதவிகளுக்கு:
இன்டர் மீடியட் தேர்ச்சி/ 10+2/ சமமான தேர்வில் அறிவியல், கலை அல்லது காமர்ஸ் பாடங்களில் குறைந்தது 50சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் இருநது ஏதேனும் ஒரு இன்ஜினீயரிங் பிரிவில் 3ஆண்டு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி.
குரூப் X ( டெக்னிக்கல்) டிரேட்ஸ் பதவிகளுக்கு:

இன்டர்மீடியட் தேர்ச்சி/ சராசரியாக குறைந்த பட்டம் 50 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 10+2 தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் இருந்து குறைந்தபட்சம் 50சதவீத மதிப்பெண்களுடன் என்ஜினீயரிங்கில் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஸ்ட்ருமெண்டேஷன் டெக்னாலஜி/ தகவல் தொழில்நுட்பம்) 3 ஆண்டு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி.
வயது: 1989 ஜூலை 1- 1993 செப்டம்பர் 30 இடையே பிறந்திருக்க வேண்டும்
மேல் விவரங்களுக்கு:
www.indianairforce.nic.in
கூடுதல் தகவல்களுக்கு:
கமாண்டிங் ஆபீசர்,
எண் 8, ஏர்மென் செலக்ஷன் சென்டர்,
413 ஏர்போர்ஸ் ஸ்டேஷன்,
தாம்பரம், சென்னை- 600 046
என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி: 044- 22395553, (எக்ஸ்டன்ஷன்: 3359)
email: ascafstam@dataone.in

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP