Monday, May 3, 2010

இளநிலை உதவியாளர் பணியிடங்கள்

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் நீரகற்று வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு ​ வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பரிந்துரை செய்யப்பட உள்ளது.
 இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எம்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
​ ​ ​  அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
​ ​ ​ தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் நீரகற்று வாரியம் மூலம்,​​ ​ காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர்.​ இந்தக் காலிப் பணியிடங்கள் முற்றிலும்,​​ தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கென ​ ஒதுக்கப்பட்ட பணியிடங்களாகும். இந்தப் பணிக்கு,​​ பெரம்பலூர்,​​ ​ அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களுக்கு பதிவு மூப்புகள் விவரப்படி பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.
​ ​ ஏதாவது ஒரு பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.​ உச்ச வயது வரம்பு கிடையாது.​ ​ தாழ்த்தப்பட்ட வகுப்பினர்,​​ முன்னுரிமையற்றோர் பொது ​ 13.7.1993 வரை,​​ பெண்கள் 13.7.1993 வரை.
​ ​ ​ தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்,​​ ​ முன்னுரிமையற்றோர் பொது 31.8.2005 வரை,​​ பெண்கள் 4.12.2006 வரை,​​ தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பொது 19.7.1995 வரை,​​ பெண்கள் 19.7.1995 வரை.
​ ​ எனவே,​​ இப் பதிவு ​ மூப்புகளுக்குள்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினர்,​​ பழங்குடியினர் இன மனுதாரர்கள் பெரம்பலூர்,​​ அரியலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட ​ சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு,​​ தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP