Saturday, September 10, 2011

58-வது திரைப்பட விருதுகள்

2010-ஆம் ஆண்டுக்கான 58-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா புதுடெல்லியில் நடந்தது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இவ்விருதுகளை வழங்கினார். இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் இவ்விருதினை பெறும் முதல் தமிழ் இயக்குநர் என்ற பெருமையை பாலச்சந்தர் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷ், மலையாள நடிகர் சலீம் குமார் ஆகியோருக்கும்,  சிறந்த நடிகைக்கான விருது தமிழ் நடிகை சரண்யா பொன்வண்ணன், மராத்தி நடிகை மிதிலி ஜகதாப் வரத்கர் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த இயக்குநருக்கான விருது ஆடுகளம் படத்தின் இயக்குநர் வெற்றிமாறனுக்கும், சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துவுக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது தம்பி ராமையாவுக்கும் வழங்கப்பட்டன. பிராந்திய மொழிப் படங்களில் 'தென்மேற்குப் பருவக் காற்று' படத்துக்கு சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் தமிழ் திரையுலகுக்கு 14 விருதுகள் கிடைத்தன. ஆடுகளம் மட்டும் 6விருதுகளைப் பெற்றது. எந்திரன் படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ், அரங்க வடிவமைப்பு ஆகியவற்றுக்கு 2 விருதுகள் கிடைத்தன.
முக்கிய விருதுகள் விவரம்: 
தாதா சாஹேப் பால்கே விருது- கே. பாலசந்தர்.
சிறந்த நடிகர்- கே. தனுஷ் (ஆடுகளம்), சலீம் குமார் (ஆதாமின்டே மகன் அபு)
சிறந்த நடிகை- சரண்யா பொன்வண்ணன் (தென்மேற்குப் பருவக் காற்று), மிதாலி ஜகதாப் வரத்கர் (பாபு பேண்ட் பாஜா)
சிறந்த திரைப்படம்- ஆதாமின்டே மகன் அபு (மலையாளம்)
சிறந்த அறிமுக இயக்குநர்- ராஜேஷ் பிஞ்சனி (பாபு பேண்ட் பாஜா)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்- தபாங் (இந்தி)
சிறந்த குறும்பட விருது- மேனர் மனுஷ்
சிறந்த இந்தி மொழிப் படம்- தோ தூனி சார்
சிறந்த உடை வடிவமைப்பு- இந்திரன்ஸ் ஜெயன் (நம்ம கிராமம்)
ஆடுகளம் தட்டிச் சென்ற 6 விருதுகள்:
சிறந்த இயக்குநர் - வெற்றி மாறன்
சிறந்த நடிகர்- கே. தனுஷ்
சிறந்த திரைக் கதை- வெற்றி மாறன்
சிறந்த எடிட்டிங்- டி.இ.கிஷோர்
சிறந்த கோரியோகிராபி- வி. தினேஷ் குமார்
சிறப்பு விருது - வி.ஐ.எஸ். ஜெயபாலன் (இலங்கை நடிகர்)
4 விருதுகளை வென்ற ஆதாமின்டே மகன் அபு:சிறந்த படம்
சிறந்த நடிகர் - சலீம் குமார்
சிறந்த சினிமாட்டோகிராபி- மது அம்பாத்
சிறந்த இசையமைப்பாளர்- ஐசக் தாமஸ் கொட்டுக்காபலி.
திரைப்படம் குறித்த சிறந்த புத்தகத்துக்கான விருது- விஜயா முலே (90)
4 விருதுகளை வென்ற இஷ்கியா:
சிறந்த ஆடியோகிராபி (லொகேஷன் சவுண்ட் ரிக்கார்டிஸ்ட்) - காமோத் கராடே.
சிறந்த ஆடியோகிராபி (ரீ- ரெக்கார்டிஸ்ட்)- தேவஜித் சங்மாய்.
சிறந்த இசையமைப்பாளர்- விஷால் பரத்வாஜ்
சிறந்த பின்னணி பாடகி- ரேகா பரத்வாஜ்
2 விருதுகளைப் பெற்ற எந்திரன்:
ஸ்பெஷல் எபெக்ட்ஸ்- ஸ்ரீநிவாஸ் எம். மோகன்
அரங்க வடிவமைப்பு- சாபு சிரில்

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP