Wednesday, February 2, 2011

அலைக்கற்றை அறிக்கை

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் ஏற்பட்டதாக புகார்கள் கூறப்பட்டதை தொடர்ந்து, அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் உரிமம் வழங்கியது தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒருநபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 2001-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரையிலான காலத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் குறித்து விசாரித்தது.
இந்த விசாரணை முடிவுற்ற நிலையில் விசாரணை அறிக்கையை, நீதிபதி சிவராஜ் பாட்டீல் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபலிடம் வழங்கினார்.150 பக்கங்களைக் கொண்ட பிரதான அறிக்கையையும் 1300 பக்கங்களைக் கொண்ட இணைப்பு அறிக்கையையும் அவர் அமைச்சரிடம் அளித்தார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP