Sunday, November 7, 2010

காக்னிசன்ட் முகாம்

மத்திய அரசின் தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே புனல்குளம் கிராமத்தில் உள்ள கிங்க்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தேர்வு செய்யப்படுவோருக்கு காக்னிசன்ட் நிறுவனம் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளது.
இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பி.இ, பி.டெக், எம்.இ., எம்.டெக்., மற்றும் எம்.சி.ஏ. பட்டதாரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். 13-ம் தேதி எழுத்து தேர்வுகளும், 14-ம் தேதி தொழில்நுட்பத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.முகாமில் பங்கேற்க பதிவு கட்டணம் எதுவும் இல்லை. 10-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பண்களுடன் முழு நேர பி.இ. படிப்பில் 2010-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். காக்னிசன்ட் நிறுவனம் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் கடந்த 6 மாதங்களுக்குள் பங்கேற்காதவர்களாக இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் மாணவர், மாணவிகளுடன் உதவியாளராக வரும் ஒரு நபருக்கு கல்லூரி வளாகத்திலேயே தங்குமிட வசதி செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்க, கீழ்க்கண்ட இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.
https://careers.cognizant.com/

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP